முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் அமைச்சுப்பதவி பறி போனாலும் கூட , அவர் பதவி வகிக்கும் போது அவரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எதுவும் இரத்து செய்யப்பட மாட்டாது என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற துணைப் பொதுச் செயலாளரும் தலைமை சட்டத்தரணியுமான சமிந்த குலரத்ன, ‘டயனா கமகே அமைச்சராக பதவி வகிக்கும் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் அரசியல் யாப்பின்படி இரத்து செய்யப்பட மாட்டாது ‘என தெரிவித்தார்.
அதன்படி, நாடாளுமன்றத்தில் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்காக டயனா மூலம் வழங்கப்பட்ட வாக்குகள் மற்றும் ஏனைய தீர்மானங்கள் இரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும், டயனா கமகே அமைச்சுப் பதவியை வகித்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் இரத்து செய்யப்படுமா அல்லது மீண்டும் வழங்கப்படுமா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டப்பூர்வ தகுதி எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் கடந்த 8ஆம் திகதி தீர்ப்பளித்தது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.