ஆட்கடத்தல் குற்றச்சாட்டு: நாடுகடத்தப்படும் இலங்கை தமிழர்

ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழர் ஒருவரை பிரான்ஸூக்கு நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.

58 வயதான சதாசிவம் சிவகங்கன் என்பவரே நாடுகடத்தப்படவுள்ளதாக, வாடகை வீட்டில் இருந்தப்படி அவர் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு சிவகங்கன் இல்லாத நிலையில் பிரான்ஸ் நீதிமன்றினால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

யுத்தம் காரணமாக 2003 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியேறி, பிரித்தானிய குடியுரிமை பெற்ற தனது மனைவி மற்றும் மகன்களுடன் தங்கியிருக்க காலவரையற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தென்மேற்கு லண்டனில் உள்ள Colliers Wood பகுதியைச் சேர்ந்த சிவகங்கன், பிரிக்ஸ்டனில் உள்ள Morley’s chicken கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரண்டு வருடங்களாக பல ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையர்களை கடத்தும் கும்பல் ஒன்றின் தலைவராகவும் செயற்பட்டு வந்ததாக பிரித்தானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த ஆட்கடத்தல் நடவடிக்கையில் 14 பேர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

பிரித்தானியாவில் எவ்வித தண்டனையும் எதிர்கொள்ளாத சிவகங்கன், முதன்முதலில் பிரெஞ்சு அதிகாரிகளின் சார்பாக மார்ச் 2022 ஆம் ஆண்டில் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

பிரான்சில் இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக பிடியாணை உத்திரவின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை ஒப்படைக்க நீதிபதி முதலில் உத்தரவிட்டார்.

எனினும், உடல் நிலை பாதிப்புடன் வீட்டிற்குள் இருக்கும் தனது மனையை பராமரிப்பாளராக ஒருவர் தேவை என்று கூறி நாடு கடத்தலை எதிர்த்து போராடினார்.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி அவரது கோரிக்கைகளை நிராகரித்தார் என பிரித்தானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு சிவகங்கன் இல்லாத நிலையில் பாரிஸுக்கு அருகிலுள்ள பியூவாஸ் நீதிமன்றம் அவருக்கு எதிராக தண்டனை விதித்திருந்தது.

இதன்படி, 2023 ஒக்டோபரில் உயர் நீதிமன்றம் முதற்கட்ட ஒப்படைப்பு ஆணையை வெளியிட்டது. எனினும், அவரது தண்டனையின் அடிப்படையில் நவம்பர் மாதம் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin