காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், “ராம் ராம்” என்று கூறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று வியாழக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி, தனது ஓட்டு வங்கிக்காக நாட்டை பிளவுபடுத்தி, இரு முஸ்லிம் நாடுகளை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி,
“இந்தியா,கூட்டணி, வகுப்புவாதம், சாதியவாதம், வாரிசு அரசியல் நிறைந்ததாக காணப்படுகின்றது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை.
ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பையும் நிராகரித்தது. காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகர் ஒருவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,
ராமர் கோவிலுக்கு பூட்டு போட விரும்புவதாக தெரிவித்தார். மக்களின் பக்தியை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது.
இந்த தேர்தலில் நீங்கள் பிரதமரொருவரை தேர்வு செய்வது மாத்திரமின்றி நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றீர்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.