ஆட்டு இரத்தத்தை வாழைப்பழத்துடன் சாப்பிட்ட பூசகர் மரணம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஆட்டின் இரத்தத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு பூசகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை கோயில் திருவிழாவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது.

இதன்போது, நல்லகவுண்டம் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (56) இவ்வாறு ஆட்டின் இரத்தத்தை அப்படியே வாழைப்பழத்துடன் இணைத்து சாப்பிட்டுள்ளார்.

இவர் கொளப்பலூர் செட்டியாம் பாளையத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் பூசாரியாகவும் இருந்து வந்துள்ளார்.

ஆடு வெட்டி இரத்தத்தை பிரசாதமாக வழங்கும் மரபு

பரண் கிடாய் பூஜையின் போது கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பரண் போன்ற அமைப்பின் மீது வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் கொடுக்கும் ஆட்டு கிடாய்களை பூசாரிகள் வெட்டுவார்கள்.

தொடர்ந்து, அவற்றின் பச்சை இரத்தத்தில் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடுவது, அதை குழந்தை இல்லாதவர்கள், தொழில் தடை, உடல்நிலை சரியாக வேண்டும் என வேண்டுதல் வைத்துள்ள பக்தர்களுக்கு பூசாரிகள் வழங்குவது வழக்கம்.

அப்போது மதியம் 20க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட கிடாயின் பச்சை இரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும் வாழைப்பழத்தை இரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர்.

இப்போது, இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் பழனிச்சாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மயங்கி விழுந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூடநம்பிக்கை

என்னதான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் மூடநம்பிக்கை என்பது எப்போதுமே ஆபத்து தான். அதற்க நல்ல உதாரணம் தான் இந்த சம்பவம். காரணம் குழந்தையின்மை, லேலையின்மை, உடல்நலம் சரியின்மை போன்றவற்றிக்கு ஆட்டு இரத்தம் எப்படி தீர்வாக முடியும்?

இதை ஆளமாக சிந்தித்தாலே இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து விடைபெறலாம் என்பதே நிதர்சனமான உண்மை என்பதையும் மறந்துவிடக்கூடாது.

Recommended For You

About the Author: admin