எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியலை உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 37 கட்சிகள் களமிறங்கவுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டைவிட மூன்று வேட்பாளர்கள் இம்முறை அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
720 உறுப்பினர்களைக் கொண்ட பிரான்ஸ் சட்டமன்றத்தில் காணப்படும் ஆசனங்களுக்கமைய ஒவ்வொரு பட்டியலிலும் 81 வேட்பாளர்கள் பட்டியலிடப்பட வேண்டும். அதாவது மொத்தமாக 2997 பேர் போட்டியிடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த 37 கட்சிகளில் ஒரு சில கட்சிகள் வெளிப்படையான ஐரோப்பிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.