ஈரான் நாட்டில் கடந்த சில தினங்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கொரசன் ரசவி மாகாண மசாத் நகரில் பெய்த கனத்த மழையின் காரணமாக, அங்குள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
வெள்ளத்தில் அங்குள்ள குடியிருப்புக்கள் அனைத்தும் நீரில் மூழ்கி, மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கி ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்சமயம் மொத்தமாக வெள்ள அனர்த்தத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, 12 பேர் காணாமல் போயுள்ளனர் என ஈரானின் பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.