தற்போது தொடர்ந்து வரும் காலநிலை மாற்றங்களினால் அநேக பிரச்சினைகள் உண்டாகின்றன.
அந்த வகையில் இந்த காலநிலை பிரச்சினைகளை சமாளிக்க காட்டெருமை உதவும் என ருமேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
200 வருடங்களுக்கு முன்பு ருமேனியாவில் காணாமல் போன ஐரோப்பிய காட்டெருமைகளை ரீவில்டிங் ஐரோப்பா மற்றும் WWF ருமேனியா ஆகிய அமைப்புக்கள் மீட்டெடுத்தன.
இந்நிலையில் குறித்த ஆய்வில், 170 காட்டெருமைகள் கிட்டத்தட்ட 2 மில்லியன் கார்களிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஒக்சைட்டை கைப்பற்றி மண்ணில் தக்க வைக்குமாம்.
புற்களை உண்ணும் இந்த காட்டெருமைகளின் கழிவுகள் மண்ணை உரமாக்கும் ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்ய உதவுகின்றன.
எனவே இந்த காட்டெருமை இனம் குறைந்தால் நிலத்தில் அதிகமாக கார்பன் வெளியேறும்.
எனவே கார்பன்டை ஒக்சைட்டைக் குறைக்கும் இந்த காட்டெருமைகள் காலநிலையின் ஹீரோக்கள் என ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர்.