”ஆதாயம் பெற்றிருந்து நிருபனமானால் என்னை தூக்கிலிடுங்கள்”: பிரதமர் மோடி

யாரேனுமிடம் ஆதாயம் பெற்றிருந்து நிருபனமானால் தன்னை தூக்கிலிடுங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றின் நேர்காணலின் போதே பிரதமர் மோடி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த மோடி,

“நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவை டாட்டா, பிர்லாவுக்கு ஆதரவானவர் என விமர்சித்தார்கள். தற்போது நேரு குடும்பமே என்னை அம்பானி-அதானிக்கு ஆதரவானவர் என குற்றம் சாட்டுகிறது.

சுதந்திர தின நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களை அழைத்திருந்தேன். சாதனையாளர்களை கௌரவிக்காமல் இருப்பது சரியா? கௌரவித்து மதிப்பு வழங்காவிட்டால் எவ்வாறு விஞ்ஞானிகள் உருவாக முடியும்?

நான் எவரிடமேனும் ஆதாயம் பெற்றிருந்து நிருபனமானால் தன்னை தூக்கிலிடுங்கள். இந்த நாட்டுக்கு வளம் சேர்க்கக் கூடிய தொழிலதிபர்களை நான் மதிக்கிறேன்.

பா.ஜ.க ஆட்சியில் தேர்தல் ஆணையம் எப்போதும் சுதந்திரமாகத்தான் செயற்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை பயனற்ற அமைப்பாக இருந்தது.

ஆனால் தற்போது அமலாக்கத்துறை திறம்பட செயற்பட்டு வருகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin