விற்பனை பட்டியலில் காம்போ நகரம்

கரடுமுரடான கலிபோர்னியா நிலப்பரப்பின் பின்னணியில் அமையப்பெற்ற சிறிய நகரம் காம்போ இன்றும் பழுதடைந்த கட்டிடங்களுடன் பண்டைய அமைதியற்ற அமெரிக்க எல்லையின் உணர்வுகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

மெக்ஸிகோ எல்லையில் இருந்து ஒரு மைல் தொலைவிலும் சான் டியாகோவிற்கு தென்கிழக்கே 50 மைல் தொலைவிலும் இந்த நகரம் அமைந்துள்ளது.

பெரும்பாலும் சமூகத்தொடர்புகள் அற்றதொரு பிரதேசமாக காணப்படுவதுடன், பழைமையை நோக்கி பயணித்த உணர்வையே கொடுப்பதாக அமைகின்றது.

இந்த நிலையில், காம்போ நகர் முழுவதையும் கொள்வனவு செய்வதற்குரிய கொள்வனவாளர்களை கவரும் முயற்சியில் வீடுவ் மனை விற்பனையாளர்கள் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, காம்போ நகரம் 6.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில் 20 இற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஒற்றைக் குடியிறுப்புகள் மற்றும் வணிக சொத்துகள் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தேவாலயம், தபால் அலுவலகம், உலோக கடை, மரக்கடை மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியனவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் காம்போ பிரதேசம் குடியேற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், இரண்டாம் உலகப் போரின் போது இராணுவ தளமாகவும் இயங்கிவந்துள்ளது.

இந்த நகரில் தற்போது 100 பேர் மாத்திரமே வசித்து வருவதுடன், இந்த நகரின் பெரும்பகுதி தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலே, காம்போ பிரதேசம் புத்துயிர் பெறுவதில் ஆர்வமுள்ள மற்றும் தற்போதைய குடியிருப்பாளர்களின் தேவைகளை மதிக்கும் ஒரு கொள்வனவாளரை தேடிவருகின்றனர்.

Recommended For You

About the Author: admin