அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு பேர் கொண்ட தனிப்படை இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரவாயலில் அமைந்துள்ள சவுக்கு சங்கரின் வீட்டிலும், தி.நகர் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் தேனி மாவட்ட பொலிஸார் இந்த சோதனை மேற்கொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கஞ்சா ஏதாவது பதுக்கப்பட்டுள்ளதா? கஞ்சா வியாபாரிகள் உடன் சவுக்கு சங்கர் தொடர்பு வைத்துள்ளரா? அது தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக பொலிஸார் மற்றும் பெண் பொலிஸார் தொடர்பில் அவதூறாக பேசியதாக தெரிவித்து செய்த முறைப்பாட்டை அடுத்து சவுக்கு சங்கர் கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் அவரின் காரில் இருந்து கஞ்சாவும் மீட்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இந்த சோதனையில் ஏதேனும் ஆதாரங்கள் மீட்கப்பட்டனவா என்ற தகவல்கள் வெளியாகவில்லை