தென்னாப்பிரிக்காவின் கடலோர நகரமான ஜோர்ஜ் நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தொடர் மாடி கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் 48 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்குண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர்களில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது பலர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த கட்டிடத்தை அண்மித்த அலுவலக கட்டிடங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.