அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையின் வாயிலில் மோதி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்புத் தடையில் வாகனமொன்று மோதியதில் குறித்த சாரதி உயிரிழந்துள்ளதாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது வெள்ளை மாளிகைக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என சந்தேகங்கள் இருந்தாலும் நடந்தது விபத்து தான் என காவல்துறை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் பெருநகர காவல் துறை விசாரணையை ஒப்படைத்தாலும், உளவுத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் வெளிப்புற வாயில் மீது வாகனம் மோதியதற்காக மற்றொரு நபர் ஜனவரி தொடக்கத்தில் வெள்ளை மாளிகைக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது