சூர்யா – ஜோதிகா
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஒன்றாக நடிக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளார்கள்.
முதலில் சூர்யாவின் காதலுக்கு நோ சொன்ன சிவகுமார், பின் ஜோதிகாவை தன்னுடைய மருமகளாக ஏற்றுக்கொண்டார். சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு இரு பிள்ளைகள். மூத்த மகள் தியா மற்றும் இளைய மகன் தேவ்.
நடிகர் சூர்யா – ஜோதிகாவின் திருமணம் கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது.
திருமண நாள்
இந்நிலையில், இன்றுடன் தங்களுடைய 16 வருட திருமண வாழக்கையை நிறைவு செய்து, 17வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள் சூர்யா -ஜோதிகா ஜோடி.
ஆம், இன்று சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு திருமண நாள். இதை அறிந்த ரசிகர்கள் பலரும், சூர்யா – ஜோதிகாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.