கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் மே தினம் எழுச்சி பேரணி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின ஊர்வலமும், மேடை நிகழ்வும் இன்று புதன்கிழமை பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.

மே தின கூட்டத்துக்கு முன்பு எழுச்சி பேரணி மற்றும் தொழிலாளர்களின் அவலங்களை சித்தரிக்கும் வாகன ஊர்திகளும் கிளிநொச்சி சித்திவிநாயகர் முன்றலில் இருந்து மத்திய கல்லூரி மைதானம் வரை முன்னெடுக்கப்பட்டது.

இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், பெருந்திரளான தமிழர்கள் இந்த மே தின நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin