பிரித்தானியாவில் புதிய சட்டம்: ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்

சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் முகமாக பிரித்தானிய அரசாங்கத்தின் உடன்படிக்கையின் கீழ் முதல் புகலிடக் கோரிக்கையாளர் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பெயர் விபரங்கள் குறிப்பிடாத புகலிட கோரிக்கையாளர் நேற்று மாலை பிரித்தானியாவில் இருந்து விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருவாண்டாவுடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் அவர் வணிக விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சுமார் 3,000 பவுண்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சட்டவிரோத புகலிட கோரிக்கையாளரை மூன்றாவது நாட்டிற்கு இடமாற்றம் செய்வது இதுவே முதல் சந்தர்ப்பம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் புகலிட கோரிக்கை 2023 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, பிரித்தானியா ருவாண்டாவிற்குப் புகலிடம் கோருவோரை வெற்றிகரமாகவும் சுமுகமாக நாடு கடத்துவது சட்டப்பூர்வமானது என்பதை இது நிரூபிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில், 19,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் தானாக முன்வந்த நிலையில் பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

எனினும், அவர்களுக்கு சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் உரிமைகள் ஒருபோதும் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவிற்கு வரும் புகலிட கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் சட்டமூலத்தை அந்நாட்டு அரசாங்கம் அண்மையில் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin