இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசார் (Monty Panesar) தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லூட்டன் நகரில் பிறந்த மான்டி பனேசார் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 167 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில், அடுத்த பொதுத்தேர்தலில் ஜார்ஜ் காலோவேயின் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராக அவர் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க விடும்புவதாக தெரிவித்த மான்டி பனேசார் பிரதமராக வரவேண்டும் என்பதே தமது அரசியல் அபிலாஷை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரித்தானியாவை பாதுகாப்பான மற்றும் வலிமையான நாடாக மாற்றுவதாகவும் மான்டி பனேசார் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.