இந்திய எல்லைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 27 பங்களாதேஷ் மீனவர்கள் இந்திய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்திய-பங்களாதேஷ் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் நேற்று முன்தினம் (4) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர் மீட்கப்பட்டுள்ளனர்.
தொழினுட்ப கோளாறு காரணமாக படகு திசை மாறியதாக இந்திய கடலோர காவற்படையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்திய தொழில்நுட்பக் குழு படகில் ஏற்பட்ட கோளாரை சரிசெய்ய முயற்சித்த போதும் முயற்சி வெற்றியளிக்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடலலையின் அளவு மற்றும் சீரான வானிலை நிலவியதையடுத்து குறித்த படகு இந்திய-பங்களாதேஷ் சர்வதேச கடல் எல்லைக் கோடு வரை இழுத்துச் செல்லப்பட்டதுடன் பங்களாதேஷ் கடலோர காவல்படையிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, நிலைமை குறித்து பங்களாதேஷ் கடலோர காவல்படைக்கு கொல்கத்தாவில் உள்ள இந்திய கடலோர காவற்படையின் பிராந்திய தலைமையகம் அறிவித்ததுடன் மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்திய கடலோர காவற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்த மீட்பு நடவடிக்கை கடலில் உள்ள விலைமதிப்பற்ற உயிர்கள் மற்றும்
அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிரான பாதுகாப்பை இந்திய கடலோர காவல்படையின் உறுதிப்பாடு பிரதிபலிக்கிறது.
இவ்வாறான வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு செயற்பாடுகள் பிராந்திய கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் அண்டைய நாடுகளுடனான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
இது இந்தியக் கடலோரக் காவல்படையின் ‘நாங்கள் பாதுகாக்கிறோம்’ என்ற குறிக்கோளுடன் ஒத்துப்போகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.