பிராந்திய பாதுகாப்புக்கும் சமாதானத்துக்கு அமெரிக்கா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஜேக் சல்லிவன் (Jake Sullivan) ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்னாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.
சாகல ரத்நாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் போதே ஜேக் சல்லிவன் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இந்த உரையாடலில், இருநாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இருவரும் அவதானம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக இலங்கை மற்றும் அதன் பிராந்திய பாதுகாப்பு நிலைகள், எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை ஒத்துழைப்புடன் தொடர்வதற்காக இலங்கையுடன் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பேணுவதில் விருப்பம் கொண்டுள்ளதை ஜேக் சல்லிவன் சாகல ரத்னாயக்கவிலடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விடயங்களில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் தற்போதைய முயற்சிகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் சல்லிவன் மற்றும் சாகல ரத்நாயக்க கலந்துரையாடியுள்ளனர்..