தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், ஐதராபாத்தில் நடிகர் அஜித்குமாருடன் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது ஐபிஎல்லில் கலக்கி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் கலாநிதி மாறனின் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த நடராஜன், இந்த ஆண்டு ஐபிஎல்லில் அதிரடி ஆட்டத்தினை காட்டி வருகின்றார்.
Actor Ajith Kumar Celebrates SRH Bowler Natrajan’s Birthday
ஆட்ட நாயகனாக மாறிய நடராஜன்
இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பலம் வாய்ந்த அணியாக மிரட்டி வருகிறது. சன்ரைசர்ஸ் ஆடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே நடராஜன் களமிறக்கப்பட்டார்.
அதிலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இந்நிலையில், சன் ரைசர்ஸ் அணி வீரர் நடராஜன் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.
கேக் ஊட்டிய தல அஜித்
நடராஜனின் இந்த பிறந்தநாளை மறக்க முடியாத பிறந்தநாளாக தல அஜித் மாற்றி இருக்கிறார் .
சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கி இருந்த அதே ஓட்டலில் நடிகர் அஜித்தும் தங்கி இருந்த நிலையில், அவர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது கேட் வெட்டி அஜித்துக்கு நடராஜன் ஊட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

