இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 20 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 304 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.

jtt

வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நிலையாக காணப்படுகின்றது.

இதன்படி, என்.டி.பி (NDB) வங்கியில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 293 ரூபாவாகவும் விற்பனை விலை 304 ரூபாவாகவும் நிலவுகின்றது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 54 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 304 ரூபா 51 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் கொமர்ஷல் வங்கியில், டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 293 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 303 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை சம்பத் வங்கியில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபாவாகவும் விற்பனை விலை 304 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin