பின்லாந்தில் துப்பாக்கிச் சூடு-ஒருவர் பலி மாணவன் கைது

பின்லாந்தின் தலைநகர் பினிஸ் (Finnish) பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதுடைய மாணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை துப்பாக்கிச்சூடு காரணமாக அதே வயதுடைய ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை காயங்களுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பாடசாலை பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்தம் காரணமாக மாணவர்கள் வேறு பாடசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர் மற்றும் அவர் பயன்படுத்தி துப்பாக்கி என்பன பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Recommended For You

About the Author: admin