காசாவில் தன்னார்வத் தொண்டாளர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் உணவு வழங்கலில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தொண்டாளர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியா, பிரித்தானியா,போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொல்லப்பட்டவர்களில் கனடா,அமெரிக்கா ஆகிய நாடுகளில் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகனத்தில் பயணித்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை 100 தொன் கிலோ கிராம் எடையுடைய உணவுப் பொருட்களை காசாவில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலானது மனிதாபிமான தொண்டு நிறுவனத்திற்கு எதிரான தாக்குதலாக அமைந்துள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது.

அத்தியவசிய உணவுப் பொருட்கள், யுத்த களத்தில் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனித ரமழான் மாதம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் மேற்கு நாடுகள் காசாவில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன.இருந்த போதிலும் யுத்த மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin