இந்தியாவில் பிரதமர் நரேந்தர மோடி தலைமையிலான ஆளும் பாஜக கட்சியினர் ஆட்சியினை தக்கவைக்க பல்வேறு அரசியல் சதிகளில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
அண்மையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கார்ஜ்வல் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீதான விசாரணைகள் என்பன அரசியல் பழிவாங்கல் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எதிர்க்கட்சியினர் இலக்குவைத்து தாக்கப்படுவதும், அவர்கள் மீது அபாண்டமான பொய்களை சொல்லுவதும் பாஜகவின் அரசியல் வங்குரோத்து நிலையை எடுத்துக்காட்டுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
மதவாத அரசியல்
பாஜக இந்துத்துவவாத கொள்கையினை வெகுவாக பரப்பின் அதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்யும் தந்திரோபாய அரசியலை மேற்கொண்டுவருகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான அண்மையில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் மற்றும் உத்திரபிரதேசதில் கொண்டுவரப்பட்ட முஸ்லிம் அறநெறி பாடசாலையான மதரஸா மீதான தடையும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு ஆதாரங்களாகும். இந்துக்கள் 79 வீதம், முஸ்லிம்கள் 14.02 வீதம், கிறிஸ்தவர்கள் 2.03 வீதம், சீக்கியர்கள் 1.07 வீதம். இது சனத்தொகை மத அடிப்படையில் காணப்படும் தரவு.
இங்கு ஆட்சியினை தீர்மானிக்கும் சக்தியாக இந்துக்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாகவே முஸ்லிம்கள் உள்ளனர்.ஆக ஆளும் பாஜகவின் இலக்கு எல்லாமே இந்துக்கள் தான்.
பெரும்பாலன மாநிலங்களில் மோடி அரசாங்கம் ஓங்கி நிற்கின்றது. அதேவேளை எதிர்க்கட்சியின் உறுதியில்லாத தன்மையும் மோடியின் பக்கம் மக்கள் நிற்பதற்கு காரணம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உண்மையில் மோடி அரசாங்கம் இந்துத்துவவாத கொள்கையினை தீவிரமாக தூக்கிப்பிடித்தாலும் கணிசனமான அபிவிருத்தி நடந்து கொண்டு தான் இருக்கின்றது. மாநிலங்கள் தொடர்பில் மாநில அரசுகள் ஆதிக்கம் செலுத்தினாலும் மத்திய அரசு நிதி மூலங்களைப் பங்கிட்டு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
தமிழக நிலைப்பாடு
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் திமுக வலுவான கட்சியாக இருக்கின்றது. அதிமுக கட்சி இரண்டாக உடைந்து பலவீனம் அடைந்துள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியடைந்து வருகின்றது.
இருந்த போதிலும் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் என கணிப்பு கூறுகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் மீனவப் பிரச்சினையில் மத்திய அரசு அசமந்த போக்குடன் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களும், கைதுகளும், படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்ற நிலை தொடர்வதாகவும், இதனால் மீனவர்களின் பாதுகாப்புக் கருதி கச்சதீவினை இலங்கையிலிருந்து மீளப்பெற வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
ஆகவே மீனவப் பிரச்சனை தமிழகத்தில் கொதி நிலையில் காணப்படும் பிரச்சனையாகும். தமிழக மக்கள் திமுகவே ஆதரிக்கும் நிலை காணப்படுகின்றது.
ஆகவே , பாஜக தனது இந்துத்துவ கொள்கையினை வலுவாக்கி இந்த தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யப் போகின்றது.
மறுபுறத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தன்னை நிலைநிறுத்துவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றது ஆனாலும் அவர்களினால் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை.
தலைமைத்துவத்தின் உறுதியற்ற தன்மையும், காங்கிரஸ் தலைவர்களின் ஒற்றுமையின்மையும், எதிர்க்கட்சிகள் ஓரணியாக பணியாற்ற முடியாத நிலையும் அவர்களின் வெற்றியை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.