கமல்ஹாசன்- இலங்கை துணை தூதுவர் சந்திப்பு.!!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசனை, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதீஸ்வரன் மரியாதைப் நிமித்தம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், துணைத் தூதரின் மனைவி கிருத்திகா தேவி மற்றும் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தியா–இலங்கை இடையிலான வலுவான மற்றும் நீடித்த இருதரப்பு உறவை இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது என மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேற்படி சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாகவும் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மவுரியா , பொதுச்செயலாளர் அருணாச்சலம், தலைமையக செயலாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோரும் பங்கேற்றனர்.


