இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அதன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுத தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகிய போரில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளனர்.