அக்பருக்கும் சீதாவுக்கும் வேறு பெயர் வையுங்கள்

பெங்கால் சஃபாரி பூங்காவில் ஒரே தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அக்பர், சீதா என்ற சிங்கங்களுக்கு பெயர் மாற்றம் செய்யுமாறு மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா (Saugata Bhattacharya) இந்த உத்தரவினை நேற்று வியாழக்கிழமை பிறப்பித்தார்.

சீதையை இந்த நாட்டின் பெரும் பகுதியினர் வழிபடுகிறார்கள், சிங்கத்திற்கு அக்பரின் பெயரை வைப்பதையும் நான் எதிர்க்கிறேன். அவர் ஒரு திறமையான, வெற்றிகரமான மற்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசராக இருந்தார் என்று மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.

இரண்டு சிங்கங்களை ஒன்றாக வைத்திருக்கும் மேற்கு வங்க அரசின் முடிவை எதிர்த்து விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (VHP) பெங்கால் பிரிவின் மனுவை நீதிமன்றம் விசாரித்தது.

இரண்டு விலங்குகளையும் ஒன்றாக வைத்திருப்பது இந்துக்களுக்கு அவமரியாதை என்று கூறி, சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியது.

2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகளால் 2 சிங்கங்கள் பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு மாற்றப்படுவதற்கு முன்பு பெயர் சூட்டப்பட்டதாக மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Recommended For You

About the Author: admin