ஊழல் குற்றச்சாட்டு போத்துக்கல் பிரதமர் பதவி விலகினார்: பாராளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது

ஊழல் முறைப்பாடுகள் காரணமாக போர்த்துக்கல் பிரதமர் அன்டனியோ கோஸ்டா (António Costa)தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி Marcelo Rebelo de Sousa தெரிவித்துள்ளார்.

பசுமை ஹைட்ரஜன் திட்டம் மற்றும் லித்தியம் சுரங்க ஊழல் தொடர்பாக அவரது வீட்டில் பொலிஸார் அண்மையில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளின் ஒரு கட்டமாக, கோஸ்டாவின் பிரதான ஆலோசகரை பொலிஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து ஊழல் வழக்கில் கோஸ்டாவிடம் விசாரணைகளை நடத்தினர். இந்த சம்பவங்களை அடுத்து, கோஸ்டா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எனினும் ஊழல் நடவடிக்கைகளிலோ சட்ட விரோதமான செயற்பாடுகளில் தான் ஈடுபடவில்லை என கோஸ்டா விளக்கமளித்துள்ளார்.

விசாரணை முடிவுகள் எப்படி இருந்தாலும் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதில்லை எனவும் அவர் முடிவு செய்துள்ளார்.

கோஸ்டாவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதை அடுத்து பாராளுமன்றத்தை கலைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போர்த்துக்கல் ஜனாதிபதி Marcelo Rebelo de Sousa தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கான புதிய தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், போத்துக்கலில் சோசலிஸ்டுகள் தலைமையிலான புதிய ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

கோஸ்டாவின் ஆட்சியின் கீழ் போர்த்துக்கல் பொருளாதார ரீதியில் துரிதமான அபிவிருத்தியை அடைந்தது.

அத்துடன் சுற்றுலாத் துறையும் அபிவிருத்தியடைந்து வருகிறது. இதனால், போர்த்துகல் முதலீட்டாளர்களின் இலக்காக மாறியுள்ளது.

Recommended For You

About the Author: admin