தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் கார்மேன் மோரினோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டில் நிலவும் பொருளாதர நெருக்கடி, மனித உரிமை பாதுகாப்பு, ஜனநாயக பாதுகாப்பு, தேர்தல்கள் ஒத்திவைப்பு என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்தும் குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை பலப்படுத்த மக்கள் விடுதலை முன்னணி விரும்புவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் லார்ஸ் பிரிடெல். தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.