எட்கா உடன்படிக்கையை எதிர்ப்பின்றி நிறைவேற்றும் வகையில் இந்தியா, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்கவை அழைத்து பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையினை மீள ஆரம்பிக்கும் வகையில் இதுவரை 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இருந்தபோதிலும் குறித்த உடன்படிக்கையினை கொண்டுவதற்கு, மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த உடன்படிக்கையினை நிறைவேற்றுவதில் தடைகளை ஏற்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணியை தமது பக்கம் ஈர்க்கும் வகையில் இந்தியா, அதன் தலைவரை அழைத்து பேச்சுக்களில் ஈடுபட்டதுடன் சலுகைகளையும் வழங்க முன்வந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
எட்கா உடன்படிக்கை கடந்த 2018 ஆம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்க காலத்தில் மீண்டும் கொண்டுவருவதற்கு இந்தியா முயன்றுவருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு குறித்த உடன்படிக்கை சாதகமாக அமையும் என இலங்கை அரசாங்கம் நம்புவதுடன் அதனைக் கொண்டுவருவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜீலை மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசுக்கு இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.