இந்தியக் குடியுரிமை சட்டம் தேர்தலுக்கு முன்பு நடைமுறை: அமித் ஷா

இந்தியாவில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

“இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்துக்கு எதிராக எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் தூண்டிவிடப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சட்டத்தின்கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். யாருடைய குடியுரிமையையும் பறிக்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்படாது,” என்று அமித் ஷா கூறினார்.

இவ்வாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு 400க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin