வரலாற்றை உருவாக்கிய ரவீந்திரா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 30 ஆவது சதத்தை பதிவு செய்துள்ள நிலையில் சக வீரரான ரச்சீன் ரவீந்திரா தனது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

விராட் கோலி – டொன் பிராட்மேன் ஆகியோரை முந்திய கேன் வில்லியம்சன்

2024 ஆம் ஆண்டின் அற்புதமான தொடக்ககத்தில் கேன் வில்லியம்சன், தனது 30 ஆவது டெஸ்ட் சததத்தை எட்டியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை பதிவு செய்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை மவுண்ட் மவுங்கானுய்யில் (Mount Maunganui) நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போதே அவர் இந்த சாதனையை நிலைநாட்டினார்.

இந்த சதத்தின் மூலம் அனுபவமிக்க நியூஸிலாந்து வீரரான வில்லியம்சன், இந்தியாவின் விராட் கோஹ்லி மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் டொன் பிராட்மேன் ஆகியோரை முந்தினார்.

தற்சமயம் டெஸ்ட் அரங்கில் கேன் வில்லியம்சன் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் 30 சதங்களையும் சமன் செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுடனான இந்த இன்னிங்னிங்ஸில் கேன் வில்லியம்சன் மொத்தமாக 16 பவுண்டரிகளுடன் 118 ஓட்டங்களை எடுத்தார்.

hfh

ரச்சீன் ரவீந்திராவின் இரட்டை சதம்

இந்த இன்னிங்ஸில் கேன் வில்லியம்சனுக்கு பக்கபலமாக தோள்கொடுத்து ஆடிய இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

மொத்தமாக மைதானத்தில் ஒன்பது மணிநேரம் நிலைத்து துடுப்பெடுத்தாடிய அவர் 366 பந்துகளை எதிர்கொண்டு, 26 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 240 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் அரங்கில் ரச்சின் ரவீந்திரா பெற்றுக் கொண்ட அதிகபடியாக ஓட்டம் இதுவாகும்.

ரச்சீன் ரவீந்திரா இதன் மூலம் நியூஸிலாந்து சார்பில் டெஸ்ட் அரங்கில் இரட்டை சதத்தை பெற்ற 19 ஆவது வீரர் ஆனார்.

அதேநேரம் டெஸ்ட்டில் அதிகப்பட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்த 12 ஆவது நபர் என்ற பெருமையினையும் பெற்றார்.

அவரது முந்தைய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், ரச்சின் ரவீந்திராவின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 18 ஆகும்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் 302 ஓட்டங்களுடன், டெஸ்ட் அரங்கில் முச்சதம் அடித்த ஒரே நியூஸிலாந்து வீரராக உள்ளார்.

h

ஃபாலோ ஒன்னை தவிர்க்க போராடும் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மவுண்ட் மவுங்கானுய்யில் நியூஸிலாந்து உறுதியான நிலையில் உள்ளது.

நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 511 ஓட்டங்களை எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்கா போட்டியின் இரண்டாம் நாள் முடிவான நேற்று ஞாயிற்றுக்கிழமை 4 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களுடன் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

முதல் பத்து ஓவர்களில் நியூஸிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன், தென்னாப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்டுக்களை தகர்த்தார்.

அதேநேரரம், டிம் சவுத்தி மற்றும் மிட்ச் சான்ட்னர் ஆகியோர் தமது பங்கிற்கு தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை எடுத்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா 80க்கு 4 விக்கெட்டுக்கள் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்றாகும்.

இன்னும் 431 ஓட்டங்களுடன் பின்தங்கியுள்ள தென்னாப்பிரிக்கா ஃபாலோ ஒன்னை தவிர்க்க போராடி வருகிறது.

jg

Recommended For You

About the Author: admin