உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜுனுக்கு 5 ஆண்டுகளின் பின்னர் சீன நீதிமன்றம், மரண தண்டனையை ஒத்தி வைத்துள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, தண்டனை இரண்டு ஆண்டுகளின் பின்னர், அவரது நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம்.
யாங் ஹெங்ஜுன் – சீன விவகாரங்களைப் பற்றி வலைப்பதிவு செய்த ஒரு எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர்.
எனினும் அவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.
அவரது விடுதலைக்காக மனுத்தாக்கல் செய்த அவுஸ்திரேலிய அரசாங்கம், இந்த முடிவால் அதிருப்தியடைந்துள்ளது.