புகையிரத கடவையை கடக்க முயன்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில் கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை புகையிரதம் மோதியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயதான 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசமுத்தையா சசிவதனன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin