உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தரைத்தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள ஞானவாபி மசூதி, இந்துக்களுக்கு சொந்தமானது என்று வாரணாசி மற்றும் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதில், ஞானவாபி மசூதியின் தரைத்தளத்தில் சிவலிங்கம் இருப்பதாக தொல்லியல்துறை கூறிய நிலையில், அதனை சீல் வைத்து பாதுகாக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஞானவாபி மசூதியின் தரைத்தளத்தில் இந்துக்கள் பூஜை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. 7 நாட்களில் தடுப்புகளை அகற்றி, பூஜைகள் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக ஞானவாபி மசூதி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.