அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல ஜாக்பாட் ஆஃபர்

ஆன்லைன் பண பரிவர்த்தனை சேவையை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் பேடிஎம் நிறுவனம் கடந்த திங்கள் கிழமை அயோத்தியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 100% கேஷ் பேக் சலுகையை அறிவித்துள்ளது.

நாடெங்கிலிருந்தும் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கேஸ் பேக் சலுகையை பெறுவதற்கு “BUSAYODHYA” என்ற ப்ரோமோ கோடை பஸ் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களும் “FLYAYODHYA “ என்ற கோடை விமான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களும் பயன்படுத்தி 100% கேஷ் பேக்கை பெற முடியும்.

ஒவ்வொரு பத்தாவது யூசருக்கு அந்நிறுவனம் கேஷ் பேக்கை அளிக்கிறது. பஸ் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் கேஷ்பேக்கும், ஃபிளைட் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கேஷ்பேக்கும் வழங்கப்படுவதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர ஏற்கனவே புக் செய்த டிக்கெட்டுகளை எந்தவித அபராதமும் இன்றி இலவசமாக கேன்சல் செய்யும் வசதியையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வாறு கேன்சல் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் எந்தவித காரணத்தையும் குறிப்பிட வேண்டியதில்லை எனவும், டிக்கெட் கேன்சல் செய்தவுடன் அவர்கள் டிக்கெட்டுக்காக செலுத்திய முழு பணமும் அவர்களுக்கு திரும்ப அளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் ராமர் கோவிலுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் பேடிஎம் வழியாகவே நன்கொடையை அளிக்கும் வசதியும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வாறு நன்கொடை அளிப்பது என்பதற்கான வழிமுறைகளை பற்றி இப்போது பார்ப்போம்.

1. முதலில் பேடிஎம் ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளவும்.
2. பில் பேமெண்ட் சென்ற ஆப்ஷனில் “வியூ ஆல்” என்பதை கிளிக் செய்யவும்
3. பிறகு “அதர் சர்வீசஸ்” என்றால் செக்ஷனில் இருந்து “டிவோஷன்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
4. ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
5. பின்பு அதில் கேட்கப்படும் உங்களது பெயர், இமெயில் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்து நீங்கள் விரும்பும் தொகையை நன்கொடையாக அளிக்கலாம்.
6. நீங்கள் விரும்பும் தொகையை என்டர் செய்தவுடன் “ப்ரோசீட் டு பே” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து முடித்ததும் நன்கொடை செலுத்தப்பட்டு விடும்.

கடந்த ஜனவரி 23ஆம் தேதி பிராண பிரதிஷ்திக்கு பின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ராமர் கோவில் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் 11 வரையும் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரையும் ராமரை தரிசிக்கலாம்.

Recommended For You

About the Author: admin