முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தலைமையிலான நிதிஹஸ் ஜனதா சபாவ (சுயாதீன மக்கள் சபை) கட்சியை புத்துயிர்ப்பூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நிதஹஸ் ஜனதா சபாவ கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது சுமார் 12க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், டளஸ் தலைமையிலான குறித்த கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர்.
எனினும் கடந்த டிசம்பரில் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் நாலக கொடஹேவா , சன்ன ஜயசுமண, டிலான் பெரேரா, வசந்த யாப்பா, கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் நிதஹஸ் ஜனதா சபாவை விட்டும் விலகிக் கொண்டனர்.
அத்துடன் அவர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் கட்சியை விட்டும் விலகிய போது கட்சியின் ஊடக கருவிகளையும் எடுத்துச் சென்றுவிட்ட நிலையில், நிதஹஸ் ஜனதா சபாவ அண்மைக்காலமாக மௌனிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் ஊடகப் பிரிவை மீண்டும் சீரமைத்துள்ள டளஸ் அலஹப்பெரும, கட்சியின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவும் வாரம் தோறும் குறைந்த பட்சம் இரண்டு ஊடக சந்திப்புகளை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் புதன்கிழமைக்குள் கட்சியின் ஊடக சந்திப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது