பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
வெயங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிகாரிகளுடன் இடன்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொதுப்போக்குவரத்து மற்றும் வீதிகளில் பெண்கள், சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக அமைச்சர் இதன்போது கவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானவர்கள் 109 எனும் துரித இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய, அழைப்பினை ஏற்படுத்தி 48 மணிநேரத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உறுதியளித்துள்ளார்.