தடைகளை எதிர்கொண்ட புர்கினா பாசோ, மாலி, நைஜர்

புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளின் இராணுவ ஆட்சியாளர்கள் மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார சமூக (ECOWAS) அங்கத்துவத்தில் இருந்து உடன் அமுலாகும் வகையில் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

இதன்படி, மூன்று நாடுகளின் தலைவர்களும் மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார சமூக அங்கத்துவத்தில் இருந்து வெளியேறுவது இறையாண்மைத் தீர்மானம் என அறிக்கை வெளியிட்டுள்ளன.

வன்முறை மற்றும் வறுமையுடன் போராடிய குறித்த மூன்று நாடுகளும் ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர் மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார சமூகத்துடன் பதட்டமான உறவையே கொண்டிருந்தன.

அத்துடன், இந்த நாடுகள் கடுமையான தடைகளை எதிர்கொண்டன. இதன் காரணமாக மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார சமூக அங்கத்துவத்தில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையிலே, புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் தமது நிலைகளை கடினமாக்கியுள்ளதுடன் சஹேல் மாநிலங்களின் கூட்டணியில் (Alliance of Sahel States) இணைந்துகொண்டன.

இந்த பின்னணியில், நியாமியில் அண்மையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார சமூக கூட்டத்தை புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் புறக்கணித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: admin