உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 22ஆம் திகதி இலட்சக்கணக்கான பக்கர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
ராமர் கோயிலில் கும்பாபிஷேம் செய்யப்பட்ட நாள் முதல் அங்கு வைக்கப்பட்டுள்ள இளமைக்கால ராமர் சிலை உலகம் முழுவதும் பிரபல்யமடைந்துள்ளது. இந்த சிலையை ராம் லல்லா என அனைவரும் அழைக்கின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் 75ஆவது குடியரசுதினம் இன்று கொண்டாடப்படுகிறது. தலைநகர் புதுடெல்லி உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திரதின நிகழ்வுக்ள இடம்பெற்று வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் இடம்பெற்ற பிரமாண்ட சுதந்திர தின நிகழ்வுகளில், ராம் லல்லா உருவச் சிலையுடனான பாரஊர்தி அணிவகுப்பும் இடம்பெற்றது. அதேபோன்று ராம் லல்லா பிரிதிஷ்டை செய்யப்பட்ட காட்சிகளும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது.
ராம் லல்லாவை கண்டதும் குடியரசுதின விழாவை காணவந்த மக்களும் விருந்தினர்களும் எழுந்துநின்று வணங்கி வரவேற்றனர்.
இதேவேளை, அயோத்தி ராமா் கோயிலுக்கு நாள்தோறும் இலட்சக்கணக்கான பக்தா்கள் தினசரி வருகை தந்து கொண்டிருப்பதால், தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பக்தா்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மற்ற மாவட்டங்களில் இருந்து அயோத்தி நோக்கி வரும் அனைத்து முக்கியச் சாலைகளிலும் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அயோத்தி நகர ஆணையா் கௌரவ் தயால் கூறுகையில், ‘‘அயோத்தியில் கூட்ட நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறோம். அவசர கால ஊா்திகள் மற்றும் உணவுப் பொருள்கள் கொண்டுவரும் வாகனங்கள் மட்டுமே தற்போதைக்கு பைசாபாத் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. அயோத்திக்குள் நுழைய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை’‘ என்றாா்.
தரிசன நேரம் நீட்டிப்பு
முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதற்கிடையே பூஜைகளுக்காக 2 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.
பக்தா்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடா்ந்து 2-ஆவது நாளான புதன்கிழமை, காலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை தரிசனம் நேரம் நீட்டிக்கப்பட்டது.
‘பௌஷ் பூா்ணிமா’ (தை பௌா்ணமி) திருநாளை முன்னிட்டு வியாழக்கிழமையும் பக்தா்கள் கூட்டம் அலைமோதியதுடன், ஆயிரக்கணக்கான பக்தா்கள் சரயு நதிக்கரையில் புனித நீராடியும் இருந்தனர்.