வாக்குறுதி அரசியலால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

வாக்குறுதி அரசியலால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தேர்தலுக்கு தயாராகும் போது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை சுங்கத் தலைமையகத்தில் இன்று (26) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,

சாத்தியமான மாற்று முன்மொழிவுகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடுவதற்கு ஒன்றிணையுமாறு அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கு இந்த முக்கியமான உரையாடலுக்காக இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Recommended For You

About the Author: admin