போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிங்கப்பூர் பிரஜை உட்பட 5 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கம்போடியா தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 1.51 டொன் எடைகொண்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக கம்போடிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர்
லாவோசிஸ் இருந்து இந்த போதைப் பொருள் கம்போடியாவுக்கு கடத்தி வரப்பட்டதாகவும் போதைப் பொருள் தாய்வானில் விநியோகிக்கப்பட இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியா போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த திங்கட்கிழமை மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடி தேடுதலில் இந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிங்கப்பூர் பிரஜை, இரண்டு சீனப் பிரஜைகள்,இரண்டு தாய்வான் பிரஜைகள் அடங்குவதாக கம்போடிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு மீன்பிடிப் படகுகள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், 8 செல்போன்கள் என்பவற்றையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.