அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உக்ரேனிய வீராங்கனையான டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
23 வயதான அவர், இரண்டு முறை ஓபன் சாம்பியனும், 18 ஆம் நிலை வீராங்கனையான பெலருஸின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்னில் திங்கட்கிழமை (22) நடந்த இந்த ஆட்டத்தில் டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா, 7-6 (8-6) 6-4 என்ற செட் கணக்கில் இரண்டு முறை சாம்பியனை தோற்கடித்தார்.
இதுவரை தனது கடந்த ஏழு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் சுற்றுகளில் தோல்வியடைந்த உக்ரேனிய வீராங்கனைக்கு இது ஒரு அற்புதமான தருணமாகும்.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4 ஆவது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 6-4, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மியோமிர் கெக்மனோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அல்காரஸ் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொள்கிறார்.