போராட்டத்தை முன்னெடுத்த சுகாதார ஊழியர்கள்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்களின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று இடம்பெற்றது.

வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கவேண்டும் மற்றும் பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் 200க்கு மேற்பட்ட சிற்றூளியர்கள் பங்கேற்றிருந்ததுடன், வைத்தியசாலை முன்றலில் ஆரம்பமான பேரணி ஏ9 வீதியூடாக பண்டாரவன்னியன் சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் வைத்தியசாலையை நோக்கி வந்தடைந்தது.

நோயாளர்களின் நலகை கருத்திற்கொண்டு மதிய நேர இடைவேளையின் போதே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin