ஜே.வி.பியுடன் இணைய தயராகும் வாசுதேவ

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க மக்கள் விடுதலை முன்னணி முன்நின்று செயற்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இப்படியான கூட்டணியை அமைப்பதை விமல் வீரவங்ச,உதய கம்மன்பில ஆகியோருக்கும் எதிர்க்கவில்லை.

மக்கள் தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே இதற்கு காரணம்.

தற்போதைய சந்தர்ப்பத்தில் இதனை தோற்கடிப்பதை விட வேறு அரசியல் எதுவுமில்லை.

சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக முகாமில் அதிகளவான ஆதரவு மக்கள் விடுதலை முன்னணிக்கே உள்ளது.

இதனால், மக்கள் சார்பான அரசியலை கட்டியெழுப்ப அந்த கட்சி முன்நின்று செயற்பட வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin