பௌத்த சமயத்தை அழிக்கும் பல்வேறு சக்திகள் தற்போது முன்நோக்கி வந்துள்ளதாகவும் போதிசத்வர் எனக்கூறிக்கொள்ளும் நபர் களனிக்கு வந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து விகாரையின் அநுநாயக்கர் திம்புல்கும்புரே நாயக்க தேரரை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நான் களனியில் இருந்திருப்பேன் என்றால், அந்த நபரை தூக்கிக்கொண்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்கு கொண்டு சென்று மன்னிப்பு கோர வைத்திருப்பேன்.
என்னிடம் அவன் சிக்கினால், கட்டி வீதியில் இழுத்துச் செல்வேன். இப்படியான நபர்களிடம் இருந்து பௌத்த தர்மத்தை காப்பற்ற மகாசங்கத்தினர் முன்வர வேண்டும்.
நாங்களும் அவர்களுடன் இருப்போம்.துஷ்ட ஆட்சியாளர்களை விரட்டியடிக்க லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்க வேண்டும். மக்களுடன் நாங்கள் இருக்கின்றோம்.
டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, பண்டாரநாயக்க, சிறிமாவோ ஆகிய தலைவர்களை தவிர நாட்டையும் மக்களையும் நேசித்த எந்த தலைவர்களும் இருக்கவில்லை.
இவர்களை தவிர நாட்டை ஆட்சி செய்த அனைவரும் சிறந்த வழியிலேயோ, கெட்டவழியிலேயோ பணத்தை மாத்திரமே சம்பாதித்தனர் என்பதுடன் உறவினர்களை உபசரித்தனர்.
இவர்களில் எவருக்கும் நாடு பற்றிய நேர்மையான எண்ணம் இருந்ததில்லை. தற்போது, ரணில், ராஜபக்ச ஜோடி இணைந்து நாட்டை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து விட்டனர்.
அத்துடன் சஜித் என்ற நபருக்கு எப்போதும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அதேபோல் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் வகித்த அமைச்சு பதவியை சரியாக செய்ய முடியவில்லை.
இப்படியானவர்கள் எப்படி நாட்டை ஆட்சி செய்ய முடியும் எனவும் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.