உலகிலேயே முதன் முதலில் வெளியிடப்பட்டதாகநம்பப்படும் 180 ஆண்டுகள் பழமையான தபால் முத்திரை ஏலத்திற்கு வந்துள்ளது.
ஒரு சதம் விலையான கொண்ட இந்த தபால் முத்திரை 25 லட்சம் டொலர் ஏலத்தில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 2, 1850 திகதியிட்ட இந்த கருப்பு முத்திரை பென்னி பிளாக் ஸ்டோம்ப் என்று அழைக்கப்படுகிறது.
300 மைல்களுக்கு அப்பால் உள்ள லண்டனில் இருந்து இங்கிலாந்தின் பெட்லிங்டனைச் சேர்ந்த வில்லியம் பிளென்கின்ஸ்லோப்பிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இது ஒட்டப்பட்டது. இப்படி முத்திரை பதித்து தபால் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும் வழக்கம் அதுவரை இருந்ததில்லை.
கடிதங்களைப் பெற்றவர்கள்தான் தபால்காரருக்கு தபால் கட்டணத்தைச் செலுத்தினர்.கடிதங்களை ஏற்க மறுத்தால், தபால் துறைக்கு நஷ்டம் ஏற்படும். இதனை ஈடுசெய்ய சேர் ரோலண்ட் ஹில் இந்த பென்னி பிளாக் தபால் தலையை வடிவமைத்தார்.
புகழ்பெற்ற ஏல நிறுவனமான Sotheby’s பெப்ரவரியில் ஏலத்தில் விடவுள்ளது. உலக தகவல் அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய இந்த தபால் தலை ஏலத்திற்கு வர இருப்பது மிகவும் உற்சாகமளிப்பதாக Sotheby’s சர்வதேச தலைவர் ரிச்சர்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.