இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது…

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று (07) அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அதில் 14 மாதங்களுக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.

அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், விராட் கோலியும் அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

காயத்தில் சிக்கி இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை.

சஞ்சு சாம்சன் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஜிதேஷ் சர்மா அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருக்கிறார்.

வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் என நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் என அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணிக்கு திரும்பி இருக்கும் ரோஹித் சர்மா ஆரம்ப வீரராக, ஜெய்ஸ்வால் உடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

விராட் கோலி மூன்றாம் வரிசையிலும், சுப்மன் கில் அல்லது திலக் வர்மா நான்காம் வரிசையிலும் பேட்டிங் இறங்கலாம். தொடர்ந்து ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா பேட்டிங் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், அக்சர் பட்டேல், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் பிட்ச்சை பொறுத்து கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் அல்லது வேகப் பந்துவீச்சாளர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்பு கிடைக்காமல் போகலாம்.

ஆதே போல, ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அணியில் தங்கள் இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள முடியும்.

டி20 தொடருக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்

Recommended For You

About the Author: admin