கடந்த செப்டெம்பர் 2ஆம் திகதி சூரியனை ஆய்வு செய்ய ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.
இது, பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தூரத்தை 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள எல்-1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்பட திட்டமிடப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்’ வாயிலாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் வரும் ஜனவரி 6ஆம் திகதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன் விண்கலம் அந்த இடத்திலேயே சுற்றிவந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும் எனவும்.
இந்த தரவுகள் சூரியனின் இயக்கம் மற்றும் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.