இந்த ஆண்டு டிசம்பரில் பதிவான டெங்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டிதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது 2023 இல் மொத்தம் 87,078 நோயாளர் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டடுள்ளது.
இதனடிப்படையில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்த நோயாளர்களில், 39,543 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, கம்பஹா மாவட்டத்தில் 18,401 வழக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 16,020 வழக்குகளும், களுத்துறை மாவட்டத்தில் 5,122 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் கூடுதலான வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
துரதிர்ஷ்டவசமாக, அண்மைய நாட்களில் டெங்கு காய்ச்சலுக்கு பல்கலைக்கழக மாணவர் மற்றும் 11 மாத கைக்குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும், 62 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகள் ‘அதிக ஆபத்து’ மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, இது அந்த பகுதிகளில் டெங்கு நோய்த்தொற்றுக்கு அதிக பாதிப்பு இருப்பதைக் குறிக்கிறது எனவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.