பெரும்பாலும் நீரிழிவு நோயாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு ஆகும்.
சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முடி உதிர்வு என்பது அதிகமானதாகவே காணப்படும்.
இதற்கு பிரதான காரணம் சீரான இரத்த ஓட்டம் இல்லாமையே ஆகும்.
அதாவது, நீரிழிவு நோயினால், இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, இரத்த ஓட்டம் தடைப்படுவதனால் ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களை அடைய முடியாத நிலை ஏற்படும்.
இதனால், உச்சந்தலை நுண்ணறைகள் பலவீனமடைந்து முடி உதிர்தல் ஏற்படுகிறது.
சிகிச்சை முறை
இதற்கான தீர்வாக, உணவு மற்றும் உடற்பயிற்சி விடயங்களில் கவனம் செலுத்தல் வேண்டும்.
வழக்கமாக நாம் செய்யும் உடற்பயிற்சி எமது உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
அவ்வாறு இரத்த சர்க்கரை அளவு அளவாக இருக்குமாயின், மயிர்க்கால்கள் மற்றும் முடியின் முனைகளில் ஒக்சிசன் விநியோகம் தடையில்லாமல் கிடைக்கும்.
உணவு முறையில் சர்க்கரை அளவை குறைத்து மெலிந்த புரதங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இது முடியின் வலிமையை மேம்படுத்தவும், உச்சந்தலையை வலுவாக வைக்கவும் உதவும்.